ஏப்ரல் 2ல் தொடங்குகிறது ராமர் கோவில் கட்டுமான பணி… மூன்று ஆண்டுகளில் முடிக்கத் திட்டம்!

  0
  5
  ராமர் கோவில்

  லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வருகிற ஏப்ரல் 2ம் தேதி ராம நவமி அன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று மாதங்களுக்குள் இதற்கான அறக்கட்டளையை நிறுவி கட்டுமானப் பணியைத் தொடங்கும்படி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

  ayodhya

  இதனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிக்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. ராமர் கோவில் கட்ட 1989ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு, வன்முறைகள் என்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தற்போது மீண்டும் கட்டுமானம் தொடங்கப்பட உள்ளது.
  ராமஜென்ம பூமி சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றி ராமர் கோவில் கட்டுவதற்காகவே பல ஏக்கர் நிலத்தை பல அமைப்புக்களும் வாங்கி வைத்துள்ளன. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து புதிய அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலமும் அந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும். அதன்பிறகு 2020ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ராமநவமி அன்று புதிய கோவிலுக்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  ayodhya

  தற்போது கோவில் கட்டுவதற்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஸ்லாப்கள் தயாராக உள்ளது. இவை அனைத்தும் புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்கு வழங்கப்படும். கட்டுமானம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். 
   இஸ்லாமியர்களுக்கு மசூதியைக் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இந்த நிலத்தை அயோத்தியிலேயே வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலத்தைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. சன்னி வக்பு வாரியத்துக்கு பரிந்துரைக்க மூன்று நான்கு இடங்களைத் தேர்வு செய்து அளிக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்திரபிரதேச முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.