ஏப்ரல் 15 முதல் ரெயில்களை இயக்க தயாராகுமாறு 17 மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவு

  0
  2
  passenger train

  ஏப்ரல் 15 முதல் ரெயில்களை இயக்க தயாராகுமாறு 17 மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  டெல்லி: ஏப்ரல் 15 முதல் ரெயில்களை இயக்க தயாராகுமாறு 17 மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சுமார் 13,523 ரெயில் சேவைகள் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக சரக்கு ரெயில் சேவைகள் மட்டும் இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது.

  ttn

  இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்கும்படி 17 ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஊரடங்கு முடிந்த பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகே ரெயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.