ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு 

  0
  1
  Go air

  இந்தியாவில் 4,300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்க ரயில்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் 4,300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்க ரயில்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் நாடுகளின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்த வெளிநாட்டினருக்கு பயணத் தடை விதித்ததன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று விமானத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ttn

  இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சரக்கு விமானங்களுக்கு அல்லது சிவில் ஏவியான் இயக்குநரகம் ஜெனரல் அனுமதித்தவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளும் ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவை GO AIR தொடங்கியது. மேலும் மே.1-ம் தேதி முதல் இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.