ஏப்ரல் 1ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு!

    0
    2
    Kerala doctors

    இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

    கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

    tt

    இதனால் இதை தடுக்கும் நோக்கில் மது குடிக்காவிட்டால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவோருக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற்றுள்ள  குடிநோயாளிகள் மருத்துவரை அணுகி மருந்து குறிப்பு சீட்டை பெற வேண்டும். பின்பு மருந்து சீட்டு மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். இதை தொடர்ந்து அவர்களுக்கு  மதுக்கடைகளில் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்கள் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

    tt

    இந்நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால், அவர்களுக்கு மது வழங்குமாறு கேரள மாநில அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து (ஏப்ரல் 1) நாளை புதன்கிழமையன்று அனைத்து மருத்துவர்களும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாக கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.