ஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது?

  0
  1
  நகம்

  வார நாட்களில் வெள்ளிக்கிழமை ஒரு அற்புத நாளாகும். எல்லா மதத்தவர்க்கும் வெள்ளிக்கிழமை விசேஷ நாட்களாக இருக்கிறது. புனித வெள்ளி என்று கிறிஸ்துவர்கள் விரதமிருக்கிறார்கள். இந்துக்கள் வெள்ளிக்கிழமையை அம்மனுக்கு உகந்த தினமாக வழிபடுகிறார்கள். தினந்தோறும் தவறாமல் தொழுகை வைத்தாலும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு செல்வதைக் கடமையாகவே இஸ்லாமிய சகோதரர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினருக்குமே

  வார நாட்களில் வெள்ளிக்கிழமை ஒரு அற்புத நாளாகும். எல்லா மதத்தவர்க்கும் வெள்ளிக்கிழமை விசேஷ நாட்களாக இருக்கிறது. புனித வெள்ளி என்று கிறிஸ்துவர்கள் விரதமிருக்கிறார்கள். இந்துக்கள் வெள்ளிக்கிழமையை அம்மனுக்கு உகந்த தினமாக வழிபடுகிறார்கள். தினந்தோறும் தவறாமல் தொழுகை வைத்தாலும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு செல்வதைக் கடமையாகவே இஸ்லாமிய சகோதரர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினருக்குமே வெள்ளிக்கிழமையை சிறப்பான நாளாக முன்னோர்கள் வைத்துச் சென்றிருக்கிறார்கள். 

  nail cutting

  நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை. அற்புதம் நிறைந்த இந்த நாளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா? நகம் வெட்டுவதற்கு நாள் என்ன, கிழமை என்ன என்று பலரும் சொல்வர். ஆனால், யாரும் இது பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வதுமில்லை. பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக்கிழமையை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு. மகாலட்சுமிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது ஐதீகம். நகம், முடி இரண்டுமே வெட்டினால் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஓர் அங்கமாகும். பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகப்படியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்று கூறுகிறார்கள்.