ஏசி ரயிலில் சுற்றுலா ! திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி !

  0
  10
  ஏசி ரயில்

  இந்தியா, நேபாளத்தில் திவ்ய தேசங்கள் சென்று தரிசிக்க 13 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது  ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம்…

  பொதுவாக அறிமுகம் இல்லாத இடங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் எல்லோருக்கும் ஒரு தயக்கம். அதற்கு காரணம் மொழி. அந்த பிரச்சனையை தீர்க்கத்தான் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனமே சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து செல்கிறது.

  இந்தியா, நேபாளத்தில் திவ்ய தேசங்கள் சென்று தரிசிக்க 13 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது  ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம்…

  irctc

  பொதுவாக அறிமுகம் இல்லாத இடங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் எல்லோருக்கும் ஒரு தயக்கம். அதற்கு காரணம் மொழி. அந்த பிரச்சனையை தீர்க்கத்தான் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனமே சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து செல்கிறது. அந்த வகையில் 13 நாட்கள் இந்தியா, நேபாளத்தில் உள்ள முக்கிய திவ்ய தேசங்களுக்கு 13 நாள் சுற்றுலாப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  அக்டோபர் மாதம் 19ம் தேதி திருச்சியில் இருந்து புறப்படும் ஏசி ரயில் முதலில் உத்தர பிரதேச மாநிலம் செல்கிறது. முக்கிய கோயில்களில் தரிசனம் முடிந்தபின், நேபாளம் முக்திநாத், கஜேந்திர மோட்ச சாளக்கிராம மூர்த்தி தலம், போக்ரா பிந்து பாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  train

  அதேபோல லக்னோ, புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ரா பிந்துபாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவு ஆலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்  கட்டணம், சைவ உணவு, உள்ளூர் பயணம், தங்கும் அறை, போக்ரா விமானக் கட்டணம் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது ஐஆர்சிடிசி. பாஷை தெரியாத இடத்தில் சென்று அவதிப்படுவதை விட இதுபோன்று நிறுனங்கள் ஏற்பாடு செய்யும் ரயிலில் சென்றால் நேரம், பணவிரயம் மொழி பிரச்சனை அனைத்தும் மிச்சமாகும். இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.