எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! பரிசு காத்திருக்கிறது!

  0
  3
  Rajappa

  இதே ராஜப்பா ஏகம்பரேஸ்வரர் கோவிலில் தலைமை அர்ச்சகர் பொறுப்பில் இருந்தபோது, பழமைவாய்ந்த சிலைகள் திருடுபோன வழக்கிலும் ராஜப்பாவை காவல்துறையினர் விசாரிக்க இருக்கின்றனர்.

  காஞ்சிபுரம் ஏகம்பரேஸ்வரர் கோவிலில் இருந்த 1600 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்துவிட்டதால், தங்கம் கலந்த புதிய சிலை செய்ய முடிவு 2016ஆம் ஆண்டு செய்யப்பட்டது. புதிய சிலையை 5.75 கிலோ தங்கம் கொண்டு செய்ததாக ஸ்தபதி முத்தையா செய்திருந்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் சிலை சோதனை செய்யப்பட்டதில் நன்கொடையாக கிடைத்த இரண்டே முக்கால் கோடி ரூபாய் மதிப்புடைய 8.7 கிலோவிலிருந்து ஒரு துளி தங்கம்கூட‌ சேர்க்கப்படாமல் சிலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலையில் 5% தங்கம் கலக்காமல், நன்கொடையாக பெற்ற தங்கத்தை மோசடி செய்த வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள், ஸ்தபதி, மற்றும் கோயில் குருக்கள் (ஒரே ஒரு குருக்கள்தாங்க) ராஜப்பா மீது வழக்கு பதிவு செய்யபட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த ராஜப்பா, கனடாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் அப்ஸ்காண்ட்.

   

  Kancheepuram Temple

  தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருந்த வெளிநாட்டுவாழ் பக்தர்களை தொடர்புகொண்டு சாட்சியை கலைப்பதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு கனடா சென்றார் ராஜப்பா. கனடாவில் வேலையை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியபோது, மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதே ராஜப்பா ஏகம்பரேஸ்வரர் கோவிலில் தலைமை அர்ச்சகர் பொறுப்பில் இருந்தபோது, பழமைவாய்ந்த சிலைகள் திருடுபோன வழக்கிலும் ராஜப்பாவை காவல்துறையினர் விசாரிக்க இருக்கின்றனர். கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத‌ தலைப்பு எதுக்கும்னு தெரியும்தானே?