எஸ்.ஐ வில்சன் கொலை.. குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை !

  21
  நடிகர் அஜித்

  குற்றவாளிகள் இரண்டு பேரும் 3 நாட்கள் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, நேற்று முன்தினம் நாகர்கோவில் அமர்வு  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் அப்துல் சமீம், தஃவ்பீக் என்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், குற்றவாளிகள் இரண்டு பேரும் 3 நாட்கள் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, நேற்று முன்தினம் நாகர்கோவில் அமர்வு  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

  ttn

  எஸ்.ஐ வில்சனை கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை குற்றவாளிகளிடம் இருந்து இன்னும் பறிமுதல் செய்யாததால், அதனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ள  30 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு போலீசார் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதிபதிகள், அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறும் 31 ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்துமாறும் உத்தரவிட்டனர். அதன் படி, இன்று எஸ்.ஐ வில்சனை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளிடம் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  ttn

  குறிப்பாக பெங்களூர் மற்றும் டெல்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அந்த தீவிரவாதிகளும் வில்சன் கொலையில் சம்பந்தப்பட்டுளார்களா என்று அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.