எஸ்.ஐ கையெழுத்து போட்டு போலி சான்றிதழ் தயாரித்த வழக்கறிஞர்கள் : கையும் களவுமாக சிக்கியது எப்படி?!

  0
  3
  Lawyers

  சிவகங்கை மாவட்டம், கல்லூரணியை சேர்ந்த கலையரசன் என்பவரின் நிலப்பாத்திரம் காணாமல் போகியுள்ளது.

  சிவகங்கை மாவட்டம், கல்லூரணியை சேர்ந்த கலையரசன் என்பவரின் நிலப்பத்திரம் காணாமல் போகியுள்ளது. அதனால், அவர் நிலப்பாத்திரத்தின் நகல் கேட்டுச் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, நிலப்பத்திரம் தொலைந்து விட்டதற்கு ஆதாரமாக காவல்துறையினரிடம் சான்றிதழ் வாங்கி வரும் படி அந்த அலுவலகத்தில் கூறியுள்ளனர். ஆனால், காவல்துறையினரிடம் செல்லாத கலையரசன் பாலையா மற்றும் பாண்டியன் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களை அணுகியுள்ளார். 
   

  Lawyers

  அவர்கள் இருவரும், இளையான்குடி எஸ்.ஐ வா.சிவம் என்பவரின் கையெழுத்தைப் போட்டு, இன்ஸ்பெக்டரின் சீல் வைத்து போலியான சான்றிதழ் தயாரித்து கலையரசனிடம் கொடுத்துள்ளனர். அதனைக் கலையரசன் சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அதனைக் கண்டு சந்தேகமடைந்த சார் பதிவாளர் அதனைச் சரிபார்த்துள்ளார்.

  Police sttation

  அப்போது, அதில் போடப்பட்டிருந்த கையெழுத்தும் சான்றிதழும் பொய் என்று சார் பதிவாளர் கண்டுபிடித்துள்ளார். அதனையடுத்து, கலையரசனிடம் விசாரணை மேற்கொண்டதில் கலையரசன் தனக்கு இரண்டு வழக்கறிஞர்கள் உதவியதாகக் கூறியுள்ளார். இந்த மோசடி குறித்து, சார் பதிவாளர் இளையான்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில், பாலையா மற்றும் பாண்டியன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.