எஸ்.எஸ்.ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வந்ததா?…ரகசியத்தை உடைக்கிறார் நடிகை சாய் பல்லவி…

  0
  12
  எஸ்.எஸ்.ராஜமவுலி-சாய் பல்லவி

  மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படத்துக்கு அடுத்தபடியாக மீடியாக்கள் அதிக நடிகர் பட்டாளத்தை இணைத்தும் கலைத்தும் விளையாடும் படம் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.

  மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படத்துக்கு அடுத்தபடியாக மீடியாக்கள் அதிக நடிகர் பட்டாளத்தை இணைத்தும் கலைத்தும் விளையாடும் படம் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் மீடியாக்களால் லேட்டஸ்டாக இணைக்கப்பட்ட நடிகை சாய் பல்லவி ‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்ல பாஸ்’ என்று மறுத்திருக்கிறார்.

  rajamouli

  ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது. இந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் – ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர்.அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். நம்ம சமுத்திரக்கனியும் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா கடந்த நவம்பர் மாதத்தில் துவங்கியது.

  junior

  அஜய்தேவ்கன், அலியாபட், நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சமுத்திரகனி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அச்செய்தி மீடியாக்களில் தீப்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் படத்தில் ஒரு காட்சி கூட நடிக்காமல் டெய்ஸி  படத்திலிருந்து விலகியுள்ளார்.

  sai

  ஜூனியர் என்.டி. ஆருக்கு ஜோடியான அந்த வெள்ளைக்காரப் பொண்ணு கேரக்டருக்கு டாப்ஸி உட்பட சில இந்தி நடிகைகளைப் பரிசீலித்த ராஜமவுலி இறுதியாக சாய் பல்லவியை கமிட் பண்ணவிருப்பதாக சில நாட்களாக செய்திகள் வந்துகொண்டுள்ளன. இந்நிலையில் அச்செய்தி தவறானது என்று மறுத்துள்ள  சாய்பல்லவி ராஜமவுலி தரப்பிலிருந்து தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்கிறார்.