எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை…தாயுடன் பொங்கலுக்கு துணி எடுக்க சென்ற போது நடந்த பயங்கரம்!

  0
  1
  சிறுவன் ரணீஷ் பாபு

  சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 8 ஆவது தளத்திற்கு செல்ல தாய் மகன் இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

  சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்துநகரைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது மகன் ரணீஷ் பாபு. 8ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனை  பொங்கலுக்கு துணி எடுக்க, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 8 ஆவது தளத்திற்கு செல்ல தாய் மகன் இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

  ttn

  அப்போது, சிறுவன் ரணீஷ் பாபு எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடியின் மீது தலையைச் சாய்த்தவாறு கீழே  வேடிக்கை பார்த்தவாறே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவனின் தலை எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடிக்கு  இடையே உள்ள சிறு இடைவெளியில்   சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் அலறி கூச்சலிட,தாய் சசிகலா உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் பதறினர். 

  ttn

  இதையடுத்து மின் இணைப்பை துண்டித்து எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டது. இருப்பினும் சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை தாய் சசிகலா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது குறித்து  வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.