எவ்ளோ தைரியம் இருந்தா எங்க சிங்கத்தையே பிடிச்சிட்டு போவ… எமனுக்கே எதிர்ப்பு தெரிவித்த மதுரை பாய்ஸ்!

  0
  3
  representative image

  பிறப்பு தொடங்கி காதுகுத்து, கருமாதி வரை எல்லா விஷயங்களுக்கும் பேனர் அல்லது போஸ்டர் அடிக்கும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அவற்றில் சில போஸ்டர்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியும், வருத்தமும் ஏற்படுகிறது. அதிலும் சில போஸ்டர்கள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.

  மதுரையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் இறப்புக்கு அடிக்கபட்ட போஸ்டரில் எமனுக்கு கண்டனம் தெரிவித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பிறப்பு தொடங்கி காதுகுத்து, கருமாதி வரை எல்லா விஷயங்களுக்கும் பேனர் அல்லது போஸ்டர் அடிக்கும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அவற்றில் சில போஸ்டர்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியும், வருத்தமும் ஏற்படுகிறது. அதிலும் சில போஸ்டர்கள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.

  இந்நிலையில்,  மதுரையில் வைக்கப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. காரணம் அரசியல் பிரமுகரின் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதற்குப் பதிலாக கண்டன போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

  madurai-death-poster

  மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவுக்கோனார். 51-ஆவது வார்டு தி.மு.க பிரதிநிதியான அடைக்கலம் அவர்களுடைய தந்தையான இவர். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி 11:45 மணிக்கு மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று(பிப்ரவரி 26) நடைபெற்ற நிலையில் தான் கண்டனப் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  அந்தப் போஸ்டரில், ‘சிங்கத்தை பிடித்துச் சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரை வடக்குமாசிவீதி பகுதி எங்கும் ஒட்டப்பட்டுள்ளது. எமனுக்கே கண்டனம் தெரிவித்த மதுரைக்காரர்களின் மன தைரியத்தை அனைவரும் மெச்சி வருகின்றனர்.