“எழுதுன பாட்டுல கூட குறை சொல்பவர் தான் ஸ்டாலின்” : அமைச்சர் உதயகுமார்

  0
  2
  Minister udhayakumar - mk Stalin

  அ.தி.மு.க அரசின் சாதனையை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக அமைச்சர் உதயகுமார் தலைமையில்  கடந்த 11 ஆம் தேதி முதல் மதுரை முழுவதும் தொடர் ஜோதி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

  அ.தி.மு.க அரசின் சாதனையை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக அமைச்சர் உதயகுமார் தலைமையில்  கடந்த 11 ஆம் தேதி முதல் மதுரை முழுவதும் தொடர் ஜோதி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர் ஜோதி பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார்.

  Minister

  அதில், ” உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடக்கவில்லை என்று மக்களுக்குத் தெரியும். ஸ்டாலின் அதிமுகவைத் தான் அதற்குக் கூட குறை சொல்வார். பாட்டு எழுதிப் பிழைப்பவர்கள் இருக்கின்றனர். எழுதிய பாட்டில் குறை சொல்லிப் பிழைப்பவர்களும் இருக்கின்றனர். ஸ்டாலின் பாட்டெழுதிப் பிழைப்பவர் போலத் தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை சொல்லிப் பிழைப்பவர் தான் ஸ்டாலின்” என்று கூறியுள்ளார்.  

  Minister jayakumar

  அதனைத் தொடர்ந்து, “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைத்தால் தேர்தலில் பங்கு பெறுவேன் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியது எழுதி வைத்த நாடகம். அந்த நாடகம் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகிறது. திமுகவில் அவர்கள் நடத்துவது மன்னராட்சி. அதிமுகவில் நடப்பது ஜனநாயக ஆட்சி” என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.