Home சினிமா எளிமையின் உருவமாய் ரிஷிகேஷில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

எளிமையின் உருவமாய் ரிஷிகேஷில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

0
எளிமையின் உருவமாய் ரிஷிகேஷில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

8 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் இமயமலைக்கு செல்ல பயணத்தை ஆரம்பித்துள்ளார்.  

 ரிஷிகேஷில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தர்பார் படப்பிடிப்பு முடிந்து பத்து நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.  நேற்று காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு    மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூன் சென்றார்.

rajini

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தை  ரஜினி அடைந்துள்ளார். அங்கு பக்தர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

rajini

இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ரஜினிகாந்த் உடல்நலனை  கருத்தில் கொண்டு சமீபகாலமாக அதை தவிர்த்து  வந்தார். தற்போது 8 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் இமயமலைக்கு செல்ல பயணத்தை ஆரம்பித்துள்ளார்.  

rajini

வரும் டிசம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் முன்னதாக இமயமலைக்கு  பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 
 

Open

ttn

Close