எல்லையில் உள்ள வீரர்கள் கொண்டாட பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய காஷ்மீர் பெண்!

  0
  1
   விநாயகர்

  விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்

  மும்பை: ராணுவ வீரர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காகப் பெண் ஒருவர் பிரம்மாண்ட விநாயகர் சிலையை வாங்கியுள்ளார். 

  vinayagar

  விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். காணும் இடமெல்லாம் அழகழகான விநாயகர் சிலைகளை நம்மால் பார்க்கமுடியும். அதன் படி  இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது  வரும் 2ஆம் தேதி  கொண்டாடப்படவுள்ளது.  

  vinayagar

  இந்நிலையில் காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் இஷ்ஹெர் என்ற பெண் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் . இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியைத்  தனது சொந்த ஊரான பூன்ச் மாவட்டத்தில் கொண்டாடுவது வழக்கம். அதனால் இவர் மும்பையிலிருந்து மூன்று பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வாங்கியுள்ளார். அதில் 6.5 அடி உயரம் கொண்ட ஒரு சிலையை மட்டும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வீரர்கள் கொண்டாட்டத்திற்காக வாங்கியுள்ளாராம். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆண்டு மட்டுமின்றி  கடந்த 10 ஆண்டுகளாக இந்த சேவையை அப்பெண் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.