எலும்பை பலப்படுத்தி முதுகுவலியைப் போக்கும் உளுந்தங்கஞ்சி

  0
  6
  உளுந்தங்கஞ்சி

  பொருளாதாரத்தை மேம்படுத்த, இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி என குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்.  குறிப்பாக நிறைய பெண்களுக்கு  நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது தவிர்க்க முடியாததாகிறது. ஆகையால் முதுகு வலியும், இடுப்பு வலியும் நிரந்தரமாகவே நம் வாழ்வில் இடம் பிடித்துக் கொண்டன.

  ulutanganchi

  உணவில் செய்யும் சிற்சில மாற்றங்களாலேயே இதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும். உளுந்தை தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே போதும். மினுமினுப்பான தோலும், தீர்க்கமான பார்வையையும், உறுதியான எலும்பையும்  பெறலாம். இவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களாவது உளுந்தங்கஞ்சியை சாப்பிட்டாலே போதும்  இதன் செய்முறை மிகவும் எளிமையானது. 

  கறுப்பு உளுந்து-1டம்ளர்
  பச்சரிசி-1/2டம்ளர்
  வெந்தயம் -1டீஸ்பூன்
  பூண்டு-10 பல்
  கருப்பட்டி-தேவையான அளவு
  தேங்காய்-1மூடி

  ulutanganchi

  செய்முறை
  உளுந்து, பச்சரிசி இரண்டையும் சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து தண்ணீர் தாராளமாக  சேர்த்து நன்கு வேகவிடவும். உளுந்து நன்கு மசிந்தவுடன் கருப்பட்டியை பாகு காய்ச்சி உடன் சேர்க்கவும்.இறுதியில் தேங்காய்ப் பால் சேர்க்கவேண்டும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட தேங்காய் நீங்கலாக கருப்பட்டியை  மட்டும் உபயோகிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ச்சியாக சேர்த்து வர இடுப்பு  பலம் பெறுவதோடு முதுகுவலிக்கும் நிரந்தரமாக தீர்வு காண முடியும்.கர்ப்பப்பையும் வலுவடையும்.