எம்.பி. சீட்…. மத்திய அமைச்சர் பதவி ரெடி…. பா.ஜ.க.வில் இணைய தயாராகும் சிந்தியா….

  0
  1
  ஜோதிராதித்ய சிந்தியா

  ஜோதிராதித்ய சிந்தியா இன்று அல்லது இந்த வாரத்தில் பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு மாநிலளங்களவை உறுப்பினர் பதவியும், மத்திய அமைச்சரவையில் இடமும் பா.ஜ.க. வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா நேற்றுடன் அந்த கட்சிக்கு குட்பை சொல்லி விட்டார். சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் காங்கிரசிலிருந்து விலகியதால், மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதேசமயம் பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

  காங்கிரஸ்

  ஜோதிராதித்ய சிந்தியா இன்று அல்லது இந்த வாரத்தில் பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி இணைந்தவுடன் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினரும் பதவியும், மத்திய அமைச்சரவையில் இடமும் வழங்க பா.ஜ.க. தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பா.ஜ.க.

  நேற்று காலை நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அதாவது 230 உறுப்பினர்களை அம்மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையான பலமான 116 இடங்களை காட்டிலும் 4 இடங்கள் கூடுதலாக இருந்தது. ஆனால் தற்போது 21 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மைக்கான பலம் 104ஆக குறையும். மேலும் காங்கிரசுக்கு 100 எம்.எல்,ஏ.க்களின் (மற்ற கட்சிகளின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து) ஆதரவு மட்டுமே இருக்கும். அதேசமயம் 107 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பா.ஜ.க. எளிதாக ஆட்சியில் அமர்ந்து விடும்.