எம்.பி-சீட்… தேமுதிக-வுடன் ஒப்பந்தம் போடவில்லை! – ஜெயக்குமார் பேச்சால் தேமுதிக அதிருப்தி

  0
  2
  minister jayakumar

  அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மாநிலங்களவை எம்.பி பதவியை தே.மு.தி.க-வுக்கு அளிப்பதாக அ.தி.மு.க எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. பா.ம.க-வுக்கு மட்டுமே எம்.பி பதவி தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. தே.மு.தி.க-வுக்கு எம்.பி சீட் ஒதுக்குவது பற்றி அ.தி.மு.க தலைமைக் கழகம் முடிவு செய்யும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனிப்பட்ட நபர் முடிவு இல்லை.  

  நாடாளுமன்றத் தேர்தலின் போது தே.மு.தி.க-வுடன் ஒப்பந்தம் ஏதும் போடப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது தே.மு.தி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மாநிலங்களவை எம்.பி பதவியை தே.மு.தி.க-வுக்கு அளிப்பதாக அ.தி.மு.க எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. பா.ம.க-வுக்கு மட்டுமே எம்.பி பதவி தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. தே.மு.தி.க-வுக்கு எம்.பி சீட் ஒதுக்குவது பற்றி அ.தி.மு.க தலைமைக் கழகம் முடிவு செய்யும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனிப்பட்ட நபர் முடிவு இல்லை.  

  premalatha

  குரூப் 1 தேர்வு முறைகேட்டில் ஆளுங்கட்சிக்குத் தொடர்பு என்று முரசொலியில் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் மீது வழக்கு தொடரப்படும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடே எங்களுக்கு இல்லை. ரஜினி – கமல் கூட்டணி சேர்வது குறித்து அ.தி.மு.க-வுக்கு கவலை இல்லை. இது பற்றி தி.மு.க-தான் கவலைப்பட வேண்டும். அ.தி.மு.க வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது” என்றார்.

  ஜெயக்குமாரின் இந்த பேட்டி தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கூட்டணி தர்மம் அடிப்படையில் தங்களுக்கு அ.தி.மு.க ஒரு இடத்தை ஒதுக்கும் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.