எம்.ஜி.ஆர் பட டைட்டில்லை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்?

  0
  4
  சிவகார்த்திகேயன்

  நடிகர் சிவகார்த்திகேயனின் SK16 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் SK16 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

  இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இயக்குநர் பாண்டி ராஜுடன் இணைந்து sk 16 படத்தில் நடிக்கிறார். 

   சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அணு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  மேலும் யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 

  sk16

  இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் வைத்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதே தலைப்பு கடந்த 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.