எம்.ஜி.ஆர் கனவு நனவாக இத்தனை கோடி ரூபாயா?!

  0
  3
  MGR Street

  கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ படத்தை எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அதற்கு செலவு செய்துவிட்டார்

  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்.ஜி.ஆர் நீண்டகாலமாக ஆசைப்பட்டார். மறைந்த இயக்குநர் மகேந்திரனிடம் அந்த நாவலை கொடுத்து திரைக்கதை எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக அமையாததால், அவரது அந்த ஆசை கடைசிவரை நிறைவேறவேயில்லை. இந்நிலையில் கமல்ஹாசன், மணிரத்னம் போன்றர்களும் அதே ஆசையில் இருந்தனர்.

  எம்ஜிஆர்

  கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ படத்தை எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அதற்கு செலவு செய்துவிட்டார். அதனால் அவரும் பொன்னியின் செல்வன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். மணிரத்னம், பொன்னியின் செல்வனை படமாக்க முடிவு செய்துவிட்டார். இதில் ஜெயம் ரவி, விக்ரம், நயன்தாரா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  news

  இது ஒருபுறமிருக்க, இந்த படத்துக்கான பட்ஜெட் 800 கோடி ரூபாய் என்கிறது கோலிவுட் வட்டாரம். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், இவ்வளவு செலவு ஆகுமாம். மிக பிரம்மாண்டமான முறையில் இதனை உருவாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னத்திடம் சிலர் இது வேண்டாத வேலை என அறிவுரை கூறி வருகிறார்கள்! எம்.ஜி.ஆர் கனவு நனவாகுதானு பொறுத்திருந்து பார்ப்போம்.

  இதையும் வாசிங்க: உலகிலேயே ‘இந்து மதம்’ மிகவும் வன்முறை நிறைந்த மதமாக மாறியுள்ளது – பொங்கிய நடிகை!?