எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களின் கைரேகையை ஒப்படைக்க வேண்டும்: உயர்நீதி மன்றம் உத்தரவு…!

  0
  1
  High court

  நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, ராகுல், இர்பான், சரவணன் ஆகிய நான்கு மாணவர்கள் உட்பட ஆறு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, ராகுல், இர்பான், சரவணன் ஆகிய நான்கு மாணவர்கள் உட்பட ஆறு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீட் ஆள்மாறாட்டங்கள் தொடர்வதால் இந்த வழக்கு குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. அதன் படி, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி நீட் தேர்வு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தனர். 

  Neet

  அந்த அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற மாநிலங்களில் தேர்வு எழுதியுள்ளதாகவும், 19 மாணவர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 6 மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையை விசாரித்த நீதி மன்றம், மாணவர்கள் வேறு மாநிலங்களில் தேர்வு எழுதியதால் இந்த வழக்கு தேசிய அளவிலான முறைகேடு, அதனால் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று கேள்வியெழுப்பியுள்ளது.

  High court

   

  அதனைத் தொடர்ந்து, இனிமேல் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் இருக்கக் கைரேகைகள் மற்றும் கணினி வழியே முகங்களைப் பதிவு செய்வதற்காக இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 4,250 மாணவர்களின் கைரேகைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.