எம்ஜிஆர் வியந்த போலீஸ்காரர்! நெகிழவைக்கும் சம்பவம்..!

  0
  12
  எம்ஜிஆர்

  எம்ஜிஆர் அரசியலுக்கு வராதகாலம்.வெளியூர் போய்விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டு இருக்கிறார்.நேரம் நடுநிசி.செங்கல்பட்டு நகரை தாண்டும் போது சாலையோரமாக ஒரு காவலர் இருளில் நிற்பதை எம்ஜிஆர் பார்க்கிறார்.காரை நிறுத்தச் சொல்லி அந்தக் காவலரை ஏறிக்கொள்ள சொல்கிறார், அந்த காவலரோ மறுக்கிறார். 

  எம்ஜிஆர் அரசியலுக்கு வராதகாலம்.வெளியூர் போய்விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டு இருக்கிறார்.நேரம் நடுநிசி.செங்கல்பட்டு நகரை தாண்டும் போது சாலையோரமாக ஒரு காவலர் இருளில் நிற்பதை எம்ஜிஆர் பார்க்கிறார்.காரை நிறுத்தச் சொல்லி அந்தக் காவலரை ஏறிக்கொள்ள சொல்கிறார், அந்த காவலரோ மறுக்கிறார். 

  mgr

  எம்ஜிஆரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்,தமிழ்நாட்டில் தன்னோடு காரில் வர மறுக்கும் முதல் மனிதனை அந்த இரவில் சந்தித்துவிட்ட அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில்,இனிமேல் இந்த ரூட்டில் பஸ்வராது வாங்க உங்களை வழியில விட்டுட்டு போறேன் என்று ஏற்றிக் கொள்கிறார்.கார் கிளம்பியதும் எம்ஜிஆர் பழம் பிஸ்கெட் எடுத்துக் கொடுத்து சாப்பிட சொல்லி இருக்கிறார். அந்தக் காவலரோ அதையும் மறுத்துவிடுகிறார்.எம்ஜிஆருக்கு ஒரு வேளை நம்மைத் தெரியவில்லையோ என்று சந்தேகம் வந்துவிட,

  mgr

  “நாந்தான் எம்.ஜி ராமச்சந்திரன் ” என்று சொல்ல,
  “தெரியும்” என்கிறார் காவலர்.
  “என் படங்கள் பாத்து இருக்கீங்களா” என்று எம்ஜிஆர் கேட்க,
  “நான் சினிவே பாத்ததில்லைங்க” என்று அடுத்த அதிர்ச்சு கொடுத்திருக்கிறார் அந்தக் காவலர்.அதற்குப்பின் காருக்குள் பேச்சரவமே இல்லை.
  தன் வீடு இருக்கும் பகுதி வந்ததும் காவலர் நன்றி சொல்லி இறங்கிக் கொள்கிறார்.

  “இங்கே வீடு ஒன்னும் காணமே” என்று எம்ஜிஆர் கேட்க, சற்று தொலைவில் இருந்த வீட்டைக் காட்டி அதுதான் என் வீடு என்று அடையாளம் காட்டுகிறார் காவலர்.

  mgr

  எம்ஜிஆர் அவர் முகத்தையே பார்க்க,” உங்க கூட கார்ல வந்தன்னு தெரிஞ்சா,அது ஊர் பூரா பேச்சாயிடும்,எங்கிட்ட பேசவே யோசிப்பாங்க அதனாலதான் இங்கயே இறங்கிடேன்” என்று காவலர் சொல்ல,அவர் வேலை பார்க்கும் காவல் நிலையத்தின் பேரை மட்டும் கேட்டுக்கொண்டு வந்து விட்டார் எம்ஜிஆர்.

  மறுநாள்,செங்கல்பட்டு டி.எஸ்.பிக்கு போன் செய்து அந்தக் காவலரைப் பற்றி எம்ஜிஆர் விசாரிக்க, அவர் மிக நேர்மையான காவலர்,டீ,காபி,புகையிலை ஏன் சினிமாக் கூட பார்க்கமாட்டார்.அவருக்கு மூன்று பெண்குழந்தைகள் அவர்களது கல்வி திருமணம் என்று கடினமான சூழலில் இருந்தாலும் யாரிடமும் கை எந்த மாட்டார் என்று பதில் கிடைக்கிறது.

  mgr

  அந்தக் காவலரின் நேர்மை எம்ஜிஆரின் மனதைக் கவர்ந்து விட மறுநாளே அவர் வீட்டு வாசலுக்கு கார் அனுப்பி வரவழைத்த எம்ஜிஆர் அவரது எல்ல சிரமங்களையும் அன்றே துடைத்து எறிந்து விட்டாராம்.