எமனாக மாறிய டிப்பர் லாரி: மகளின் கையை பிடித்து கொண்டு வந்த தாயின் கடைசி நிமிடம்!

  0
  7
  நெல்லை கண்ணன்

  சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

  சேலம்: சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

  சேலம் தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கிறிஸ்டி அகஸ்டா ராணி. அவர் நேற்று மாலை தனது மகளுடன் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார்.  சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியுள்ளது. இதனால் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி  உடல்  நசுங்கி மகள் கண்முன்னே கிறிஸ்டி அகஸ்டா ராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

  salem

  இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட  தாரமங்கலம் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்  ஓட்டுநர் நினைத்திருந்தால் வண்டியை பிரேக் அடித்து நிறுத்தி இருக்கலாம். ஆனால்  அவர் வேண்டுமென்றே சாலை ஓரமாக சென்ற ஆசிரியரை மோதியது போன்று காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

  salem

  இதையடுத்து அந்த லாரி ஓட்டுநரை தாரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். அவருடைய  லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஓட்டுநர்  செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாகச் செம்மண் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வந்ததுள்ளது தெரியவந்துள்ளது. இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.