எப்படி இருந்த ஓ.என்.ஜி.சி. இப்படி ஆயிட்டே…… லாபம் ரூ.4,152 கோடியாக குறைந்தது……

  0
  4
  மது வாங்கி செல்லும் குடிமகன்

  ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,152 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் குறைவாகும்.

  மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,152 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் (2018 அக்டோபர்-டிசம்பர்) 49.8 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,263 கோடியாக இருந்தது.

  ஓ.என்.ஜி.சி.

  2019 டிசம்பர் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வருவாய் 14.4 சதவீதம் குறைந்து ரூ.23,710 கோடியாக வீழ்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் விலை மற்றும் உற்பத்தி குறைந்ததால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் குறைந்துள்ளது.

  ஒ.என்.ஜி.சி.

  ஒ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் 48.2 டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1 சதவீதம் குறைவாகும். அதேவேளையில் கியாஸ் உற்பத்தி 8.4 சதவீதம் குறைந்து 587 கோடி கனமீட்டராக சரிவடைந்துள்ளது.