என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமான மனிதர் அஜித்: பிக்பாஸ் 3 பிரபலம் ட்வீட் 

  0
  1
  அஜித்

  பிக் பாஸ் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

  பிக் பாஸ் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். கவினுடன் காதல் வயப்பட்டு இவர் செய்த சில செயல் மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியதால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே சென்ற பிறகு லாஸ்லியா- கவின் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 

  இந்த நிலையில் அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத சாக்ஷி தன்னுடைய ரசிகர்களைச் சந்திப்பது அவர்களுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது என்று தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார். 

  இந்த நிலையில் இவர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

  அதில், ‘நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித். அவர் ஒரு ஜெண்டில்மேன். தொழிலில் நேர்மையானவர். எந்த ஒரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்தக்கூடியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.