‘என் மகளை பார்த்ததும் கண்கலங்கி விட்டது’ : நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!

  0
  9
  ரோபோ சங்கர்

  பிகில் படத்தில் தனது மகள் நடித்துள்ளது குறித்து நடிகர் ரோபோ  சங்கர் ட்வீட் செய்துள்ளார். 

  பிகில் படத்தில் தனது மகள் நடித்துள்ளது குறித்து நடிகர் ரோபோ  சங்கர் ட்வீட் செய்துள்ளார். 

  bigil

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  bigil

  இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில், கால்பந்து பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்திலும்  விஜய் காட்சி அளிக்கின்றார். பெண்களை கவுரவிக்கும் வகையிலும், கால்பந்து விளையாட்டை முன்னிலைப்படுத்தியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காதல், மாஸ் என பட்டையைக் கிளப்பியுள்ளது.  இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடித்துள்ளார். 

   

  இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரோபோ சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், என் மகளை பிகில்  டிரைலரில்  பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டன. இந்த வாய்ப்பை கொடுத்த அட்லீ மற்றும் விஜய்க்கு நன்றி.  டிரைலர் அற்புதமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.