என் தொகுதியின் ஒரு பகுதி பாகிஸ்தான்: பா.ஜ. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

  0
  1
  சுரேஷ் ரத்தோர்

  உத்தரகாண்ட் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது தொகுதியின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ளது ஜவாலாபூர் சட்டப்பேரவை தொகுதி. இந்த தொகுதியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை அளவில் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த தொகுதி பா.ஜ.க. வசம் உள்ளது. தற்போது இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வின் சுரேஷ் ரத்தோர். அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் சாலையை குறிப்பிட்டு தொகுதி மக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சைய கிளப்பியுள்ளது. 

  ஹரித்வார்

  ரத்தோர் பேசியதை ஒருவர் வீடியோவா எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்தார். தற்போது அது வைரலாகி உள்ளது. ஹரித்வாரில் ஒன்றில் கலந்து கொண்ட ரதோர் பேசுகையில் கூறியதாவது: இந்த சாலையின் நீளம் 67 கீ.மீட்டர். எனது தொகுதியின் நீளமும் 67 கி.மீட்டர்தான். இதில் 52 சதவீத பகுதி பாகிஸ்தான் உள்ளது. மொத்த பாகிஸ்தானும் எனது பங்கின் (தொகுதியின்) கீழ் வருகிறது. எஞ்சிய 48 சதவீத பகுதி வாக்குகள் அடிப்படையில்தான் நான் வெற்றி பெற்றேன். எங்களது அரசியலும் அந்த 48 சதவீத வாக்குகளை சார்ந்தே இருக்கும். 

  பா.ஜ.க.

  இந்த சாலை பணி திறம்பட முடிக்கப்படும் மற்றும் எந்தவொரு புகார் மற்றும் தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் இவ்வாறு அவர் பேசினார். பெரும்பான்மை அளவில் முஸ்லிம் மக்கள் உள்ளதை மனதில் வைத்துதான் 52 சதவீத பகுதியை பாகிஸ்தான் என ரத்தோர் கூறியதாக பரவலாக பேசப்படுகிறது.