என் தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்: நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

  23
  விஷ்ணு விஷால்

  நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தை குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார். 

  நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தை குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார். 

  vishnu

  வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக  விஷ்ணு விஷால் அவரது தோழி ஜுவாலாவுடன்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டு வந்தார். இதனால் அவர் ஜுவாலாவை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது  தந்தை குறித்து டிவிட்டர் பக்கத்தில், ’32 வருட காலம் காவல்துறையில் பணிபுரிந்த தனது தந்தை தற்போது ஓய்வு  பெற்றுள்ளார்.அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்த பயணத்தில் அவருக்கு பக்கத்துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் விஷ்ணு விஷால் தனது  மகன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

  விஷ்ணு விஷாலின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.