என்.ஜி.கே படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 

  0
  2
   சூர்யா

  என்.ஜி.கே படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

  சென்னை: என்.ஜி.கே படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

  இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

  முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்தி உருவாகியுள்ள இதில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

  இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் சாட்டிலைட்  உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.