என் கடனையெல்லாம் திருப்பிக்கொடுக்க நான் ரெடி-  விஜய் மல்லையா அதிரடி ட்வீட்!

  0
  2
  vijayabaskar

  வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகை அனைத்தையும் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

  வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகை அனைத்தையும் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

  இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான வழக்கு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இதுமட்டுமின்றி பிரிட்டனிலிருந்து மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும் வழக்கும் ஒருபுறம் நடைபெற்றுவருகிறது.

   

  இந்நிலையில், வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய டிவிட்டர் பக்கத்தில், “தொழிலில் தோல்வி அடைந்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். பண மோசடி விவகாரத்தில் கவுரவமாக வெளியேறவோ அல்லது சிக்கல்களை தீர்க்க வாய்ப்பு தரவேண்டும். நான் வாங்கிய பணத்தை  100% கொடுக்க தயார்… ஏற்றுக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.