“என் இனத்தைத் தொட்டால் இது தான் கதி”… ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக் : சர்ச்சையில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி!

  0
  3
  துரைமுருகன்

  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது

  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், அக்கட்சியின் தலைவர் சீமான் பேசிய உரை ஒன்றுக்கு டிக் டாக் செய்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டார். 

  ttn

  அந்த வீடியோவில் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு முன்னால் நின்று கொண்டு, எங்கள் இனத்திற்கு ஒரு பெருமை உண்டு. நீ எப்பேர்ப்பட்ட கொம்பனாவது இரு. எந்த நாட்டின் அதிபராக இரு. என் இனத்தைத் தொட்டால் இது தான் கதி” என்ற உரைக்கு ராஜீவ்காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி டிக் டாக் செய்துள்ளார். 

  ttn

  அந்த வீடியோ வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக் செய்ததற்காக அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.