என்னை தக்க வைக்க வேண்டாம்… சிஎஸ்கே அணியிடம் கறார் காட்டிய தோனி!

  0
  4
  தோனி

  ஐபிஎல் போட்டித் தொடர்களின் ஆரம்பத்தில் இருந்தே, சிஎஸ்கே  அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இந்நிலையில், அடுத்து வரும் 2021ல்  நடக்க இருக்கும்  ஐபிஎல் போட்டியில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்று டோனி கூறி இருக்கிறார்.  2021 ஆம் நடக்கும் ஏலத்தில் அனைத்து அணிகளும், முழு அணியையும் ஏலத்தில் தான் எடுக்க வேண்டும். ஒரு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

  dhoni

  அப்படி இதுக்கு முன் நடத்த அனைத்து ஏலத்திலும் தோனியை தக்க வைத்து கொண்டது சிஎஸ்கே  அணி நிர்வாகம். ஆனால் இந்த முறை தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ஏலத்தில் பங்கேற்க  விட்டு விடலாம் என்றும் தோனி  கூறியுள்ளார். 

  dhoni

  தோனி இந்த முடிவு எடுக்க காரணம், தான் ஒருவனுக்காக சிஎஸ்கே  அணி அதிகம் பணம் செலவு செய்ய வேண்டாம் என்று தெரிய வந்துள்ளது. தற்போது தோனி 15 கோடி வரை பெற்று வருகிறார். அப்படி தோனி 2021 ஆம் ஆண்டு நடக்கும் ஏலத்தில் பங்கு கொண்டால் இதை விட குறைத்த தொகைக்கே தோனியை சிஎஸ்கே  அணி ஏலத்தில் எடுத்துக் கொள்ள முடியும். 

  dhoni

  தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக பல்வேறு  வதந்திகள் வந்த நிலையில் அவரது கிரிக்கெட் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என்று அவரின் ரசிகர்களுக்கு தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. 2020 ஆம் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே  அணியின் கேப்டனாக தோனி விளையாடுவர் என்று சிஎஸ்கே  அணி உறுதி அளித்துள்ளது.

  dhoni

  தோனி சிஎஸ்கே  அணியை விட்டு வெளியேற இந்த முடிவு எடுக்கவில்லை மாறாக ஏலத்தில் கலந்துக் கொண்டு மீண்டும் சிஎஸ்கே  அணிக்கே திரும்புவதே அவரின் திட்டமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில்  தோனி ஆடும் ஆட்டத்தை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றார்.