என்னை கார் வரை வந்து வழி அனுப்பினார்: அஜித்தின் செயலை கண்டு பிரபல பாலிவுட் நடிகை நெகிழ்ச்சி!

  0
  1
  அஜித்

  நடிகை வித்யா பாலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த செயலை கண்டு நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது. 

  சென்னை: நடிகை வித்யா பாலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த செயல் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

  மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இதில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

  ajith

  இந்த நிலையில் இதில் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு நடிகை வித்யா பாலன் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது தல அஜித்தைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘ஒரு நாள் படப்பிடிப்பின் போது, அஜித்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. நான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிவு அடையவில்லை . உடனே அஜித் மற்ற நடிகர் போல் தனது காட்சி முடிந்துவிட்டதே என்று கிளம்பாமல்,என்னுடைய காட்சிகள் முடியும் வரை நீண்ட நேரம் காத்திருந்தார்.

  vidya

  பின்பு என்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு பின்பு அவர் புறப்பட்டுச் சென்றார்’. அஜித்தின் இந்த செயல் வித்யா பாலனை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.