‘என்னையும் கொன்னுடுங்க…இப்போ நான் கர்ப்பமாக இருக்கேன்’ : கதறும் குற்றவாளி மனைவி!

  17
  சேதுராமன்

  கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  

  ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  

  ttn

  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பலவேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

  இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சென்ன கேசவலுவின் மனைவி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘என் கணவனை சுட்டுக்கொன்ற இடத்திலேயே என்னையும் சுட்டு கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்கு முன்பு தான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று கூறி கதறியுள்ளார். 

  ttn

  முன்னதாக குடிப்பழக்கத்தால் சென்ன கேசவலுவின் கிட்னி பாதிக்கப்பட்டு இருந்ததும் கடந்த சில நாட்களாக அவருக்கு சிறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.