என்னையும் அதே இடத்தில் கொன்றுவிடுங்கள்… குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி

  11
  Telangana Encounter

  சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி கேசவலுவின் மனைவி போலீசாரிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

  சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி கேசவலுவின் மனைவி போலீசாரிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

  ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பொதுமக்களும், அரசியல்வாதிகளும் வரவேற்பு அளித்தாலும் மனித உரிமை ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

  Telangana Encounter

  குற்றவாளியின் ஒருவருமான சின்னகேசவலுவின் மனைவி, “எங்களுக்கு திருமணமாகி ஒருவருடம் தான் ஆகிறது. நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். திருமணமான ஒரு ஆண்டுக்குள் என் கணவன் என்னை விட்டு போய்விட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்துக்கே என்னையும் அழைத்து சென்று கொலை செய்துவிடுங்கள். அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது” என கூறினார்.