என்னுடைய செல்போன் போலீசிடம் இருக்கு! விசிக நிர்வாகிகள் என்னை திட்ட முயற்சி செய்ய வேண்டாம் – காயத்ரி ரகுராம்

  0
  4
  காய்த்ரி ரகுராம்

  என்னுடைய செல்போன் போலீசிடம் இருக்கு! விசிக நிர்வாகிகள் என்னை திட்ட முயற்சி செய்ய வேண்டாம் – காயத்ரி ரகுராம்

  தன்னுடைய செல்போன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காய்த்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

  சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், நான்  மோடிக்கு எதிராக பேசுவதைத் திரித்து நான் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று  அவதூறு பரப்புகிறார்கள். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. என்னைப் பின்பற்றும் மக்களில் சுமார் 80% சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறியிருந்தார்.இதுகுறித்து பாஜக ஆதரவாளரும் நடிகையுமான  காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், லைட்டா க்ளிசரின்  போடலாமே சார்..நடிப்பு பத்தல என்றும் தனது மற்றொரு பதிவில், எல்லா இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்று குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளார்.  மதவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசியிருக்கும் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

  Gayathri Raguramm

  இதுமட்டுமின்றி, திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. எல்லா இந்துக்களும் அவருக்கு சேலை அல்ல ஒரு மடிசாரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எம்.பினா 5 அடி கூந்தல் இருக்குமோ..? என்று  வசைபாடினார். இது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காய்த்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. 

   

  Gayathri Raguramm

  இந்நிலையில் காயத்ரி ரகுராம் அவரது முகநூல் பக்கத்தில், “ என்னுடைய செல்போன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மட்டுமே எனக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் எடுக்கின்றனர். எனவே விசிக நிர்வாகிகள் யாரும் என்னை திட்டுவதற்காக போன் செய்ய வேண்டாம். நீங்கள் என்னைக் கொல்ல விரும்பினால் என் இந்து ரத்தம் உங்கள் மீது தெறிக்கும்.  அது உங்கள் அனைவரையும் புத்திசாலியாக்கும். நீங்கள் அனைவரும் காவியாக மாறுவீர்கள்” என பதிவிட்டுள்ளார்.