என்னது “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” யா? தமிழ் மொழியை கொல்லும் மோடி அரசு!!

  0
  1
  statueofunity

  உலகிலே மிகப்பெரிய சிலையான சர்தார் படேலுக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை தமிழ் மொழியில் மத்திய அரசு வித்தியாசமாக மொழி பெயர்த்துள்ளது

  சென்னை: உலகிலே மிகப்பெரிய சிலையான சர்தார் படேலுக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை தமிழ் மொழியில் மத்திய அரசு வித்தியாசமாக மொழி பெயர்த்துள்ளது.

  இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சிலை அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.  இந்த சிலைக்கு “ஒற்றுமையின் சிலை” (The Statue Of Unity)என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  statueofunity

  பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேலின் உலகிலேயே மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டிருக்கும் வளாகத்தில் உள்ள பலகையில் அந்த சிலையின் பெயர் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.