என்னது… நேர்கொண்ட பார்வை முன்பதிவு டிக்கெட் அதுக்குள்ள காலியா? அதிர்ச்சியில் தல ரசிகர்கள்!

  0
  1
   நேர்கொண்ட பார்வை

  நேர்கொண்ட பார்வை படத்தின் முன்பதிவு தொடங்கி ஒரு சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுப்போனதாதல் தல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

  சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் முன்பதிவு தொடங்கி ஒரு சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுப்போனதாதல் தல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

  தல அஜித் தற்போது பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் பட ரீமேக்கில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை என்று பெயரிட்டுள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அதில் தல அஜித் வழக்கறிஞராக நடிக்க அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார்.

  ticket

  ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் முன்பதிவைச் சென்னை சத்யம் திரையரங்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் புக்கிங் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. டிக்கெட் கிடைத்ததால் ஒரு சில அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.