என்னது கவினின் முன்னாள் காதலி பிரியா பவானி சங்கரா….? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

  0
  17
  கவின்- பிரியா பவானி சங்கர்

  பிக் பாஸ் கவினின் முன்னாள் காதலி பிரியா பவானி சங்கர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் கவினின் முன்னாள் காதலி பிரியா பவானி சங்கர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் சீசன் 3யில் பிளே பாயாக வலம் வருபவர் கவின். முதலில் நான்கு பேரிடமும் கடலை போட்டு வந்த கவின் பின்னர் சாக்ஷியை காதலிப்பதாகக் கூறினார். தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணிடம் உள்ள அனைத்து தகுதியும் இருப்பதாக அவரை மயக்கி தனது வலையில் சிக்க வைத்தார். ஆனால் நாட்கள் செல்லச்செல்லக் கவினுக்கு  சக போட்டியாளரான லாஸ்லியா மீது காதல் ஏற்பட்டு சாக்ஷியை கழட்டிவிட்டார்.

  இதனால் மனமுடைந்த சாக்ஷி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் பாதியில் வெளியேறினார். அவர் வெளியே சென்ற பின் கவின்- லாஸ்லியா போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதாவது தங்களின் காதலை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வெளியே போய் முடிவு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர். 

  kavin

  இந்நிலையில் நேற்று முன்தினம் கவின், தான் 3 வருடங்கள் ஒரு பெண்ணுடன் காதல் உறவிலிருந்ததாகவும், நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாகவும் கூறினார். ஆனால் லாஸ்லியா அதுகுறித்து வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். 

  kavin

  இதை அறிந்த சமூகவலைத்தள வாசிகள் அந்த நபர் யாராக இருக்கும் என்று தேடி கண்டுபிடித்துள்ளனர். அவர் வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலின் மூலம் பிரபலமாகி, சினிமா படங்களில் நடித்து வரும் பிரியா பவானிஷங்கர் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் சேட் செய்த ஸ்க்ரீன் ஷாட்களும் ஆதாரமாகக் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.