எனது கணவர் எனக்கு கணவரல்ல என் அம்மாவுக்குதான் கணவர்- அதிர்ச்சிக்கொடுக்கும் பெண்!

  0
  1
  ப்ரீத்தி

  இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இரண்டாவதாக வேறொருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், தனது கணவர் தனது தாயுக்கும் கணவர் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இரண்டாவதாக வேறொருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், தனது கணவர் தனது தாயுக்கும் கணவர் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ப்ரீத்திக்கும் மற்றொரு இளைஞருக்கும் தொடர்பு இருப்பது ரமேஷ்க்கு தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து ரமேஷ் அவரது மனைவியிடம் கேட்டபோது, தனக்கு உங்களுடன் சேர்ந்துவாழ விருப்பமில்லை என்றும், அந்த இளைஞரை திருமணம் செய்து வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ப்ரீத்தி மீது ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடனே காவல்துறையினர் ப்ரீத்தியை அழைத்து விசாரணை செய்தனர். 

  ப்ரீத்தி

  அதற்கு ப்ரீத்தி, “நான் ரமேஷை முறையாக கல்யாணம் செய்யவில்லை. அந்த நேரத்தில் எனக்கு 15 வயது மட்டுமே ஆனதால் எனது அம்மாவின் சான்றிதழ், புகைப்படம், அவரது பெயரைக் கொடுத்து தான் திருமணம் நடந்தது. அதனால் ரமேஷ் சட்டப்படி என் அம்மாவையே திருமணம் செய்துள்ளார். அவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளுக்கு நான் தாயானாலும், அவருடன் நடந்த திருமணம் செல்லாது” என தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியில் மூழ்கி செய்வதறியாது திகைத்தனர்.