எனக்கே துரோகம் பண்ணுவியா? காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர காதலன்! 

  0
  2
  Murder

  காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்துறையிடம் சென்று காதலன் சரணடைந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்துறையிடம் சென்று காதலன் சரணடைந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் ஹரதி – முகமது ஷாஹித். இருவரும் கல்லூரியில் நண்பர்களாக வலம் வந்துள்ளனர். காலப்போக்கில் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஷாஹித்தின் வீட்டிற்கு ஹரதி அடிக்கடி போவதை வழக்கமாக வைத்துள்ளார். இருவரது வீட்டிலும் இவர்களது காதல் தெரியாததால் ஹரதியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 

  Murder

  இதற்கிடையில் தனியாக பேச வேண்டும் என ஹரதியை வீட்டிற்கு அழைத்து சென்றார் ஷாஹித். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பிளேடால் ஹரதியின் கழுத்தை கொலை செய்து அங்கிருந்து நகர்ந்தான். 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிறைக்குச்சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் காதலியை கொன்றுவிட்டேன், சிறையில் அடையுங்கள் என கோரியுள்ளான். இதைக்கேட்ட சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் ஹரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் ஷாஹித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.