எனக்கு யாரும் பொண்ணு தரமாட்றாங்களே… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

  0
  3
  தற்கொலை

  சேதுராமன்  குடிப்பழக்கத்துக்கு  அடிமையானதால் சம்பாதிக்கும் பணத்தை குடித்து விட்டு வருவாராம்

  மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் (75). இவரது மகன் சேதுராமன். 40 வயதாகும் இவர் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகிறார்.  சேதுராமன்  குடிப்பழக்கத்துக்கு  அடிமையானதால் சம்பாதிக்கும் பணத்தை குடித்து விட்டு வருவாராம். இதனால் ஒரு கல்யாணம் செய்து வைத்தால் மகன் திருந்திவிடுவான் என்று நினைத்த அவரது தந்தை வைத்தியநாதன் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

  ttn

  ஆனால் சேதுராமன்  குடிப்பழக்கம் கொண்டவர் என்பதால் பலரும் பெண் தர தயங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், எனக்கு 40 வயசாகிடுச்சி எனக்கு திருமணமே நடக்காதா, நான் மட்டுமா குடிக்கிறேன்,ஊரே குடிக்கிறது என புலம்பியபடியே இருந்துள்ளார். 

  ttn

  இந்நிலையில் கடந்த 10ம் தேதி அங்குள்ள பெருமாள் கோயில் வாசலில் மயங்கி கிடந்துள்ளார். அதை கண்ட அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சேதுராமன் மதுவில் விஷம் கலந்து குடித்து  தற்கொலை செய்துகொண்டது  தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.