எனக்கு மோடியிடம் கேட்க எதுவும் இல்லை; சொல்ல ஒரு விசயம் இருக்கிறது! நடிகை ரோகிணி அதிரடி !?

  0
  23
  actress rohini

  நடிகை ரோகிணி வழக்கமான சினிமா நடிகை கிடையாது.சமூக செயல்பாட்டாளர் ,மாற்று சினிமா மீது தீராத காதல் என பன்முகத்தன்மையுடையவர்.

  நடிகை ரோகிணி வழக்கமான சினிமா நடிகை கிடையாது. சமூக செயல்பாட்டாளர் ,மாற்று சினிமா மீது தீராத காதல் என பன்முகத்தன்மையுடையவர்.

  சமூகம் சார்ந்த போராட்டலில் இவரை சர்வ சாதாரணமாக பார்க்கமுடியும். அவரது எழுத்துக்களிலும் அந்த காட்டம் வெளிப்படும்.அப்படிப்பட்டவர் பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார். அது இதுதான்- ‘எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால்,அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் மட்டும் உள்ளது. ப்ளீஸ் தேர்தலில் நீங்கள் போட்டியிடாதீர்கள்!

  நரேந்திர மோடி

  காரணம், இனிமேலும் இப்படியொரு பாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்பவர்களை ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை’’ என்றார். 

  இந்த வாட்ஸ் அப் செய்தி நேற்றிலிருந்து வைரலாக பரவியிருக்கிறது. இதை அவர்தான் அனுப்பினாரா இல்லையா என்பது குறித்து ரோகிணி தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்பும் இல்லை!