எனக்காக நான் வாழ்கிறேன்: பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோ; திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!?

  36
  ஜூலி

  நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படத்தைத்  தொடர்ந்து அவரை வலைதளவாசிகள் பலர் வசைபாடி வருகின்றனர். 

  சென்னை:  நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படத்தைத்  தொடர்ந்து அவரை வலைதளவாசிகள் பலர் வசைபாடி வருகின்றனர். 

  2017-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் ‘வீர தமிழச்சி’ என்ற பெயருடன் பிக் பாஸ்  வீட்டிற்குள் வந்து,  மிகவும் கடுமையான விமர்சனத்திற்குள் ஆளானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் இன்று வரை ஜூலியின் படிந்து கொண்டே இருக்கிறது. 

  julie

  இதைத் தொடர்ந்து தற்போது  பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.  இந்த போட்டியில் மீண்டும்  ஜூலி  கலந்து கொள்ள இருப்பதாகச் செய்தி வெளியாகின.ஆனால்  அது வெறும் வதந்தி என்பது காலப்போக்கில் தெரியவந்தது. இருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜூலி அம்மன் தாயி என்ற படத்தில் நடித்துள்ளதுடன் ரியாலிட்டி ஷோக்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

   

  இந்நிலையில் ஜூலி சமீபத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ‘எனக்காக நான் வாழ்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். இதை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவருக்கு ஆதரவாக பதிலளித்துள்ள நிலையில் சிலரோ வழக்கம் போல அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

   

  முன்னதாக நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இப்படி திட்டுகிறீங்க என்று ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.