எந்த ராசிக்கெல்லாம் தொழிலில் ஏற்றம் உண்டாகும்?

  0
  6
  ராசிபலன்

  உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

  இன்று செவ்வாய்க்கிழமை (29-10-2019)
  நல்ல நேரம் : 
  பகல் : 10-45 மணி முதல் 11-45 மணி வரை
  மாலை : 4-45 மணி முதல்5-45 மணி வரை 
  இரவு : 07-30மணி முதல் 08-30 மணி வரை
  ராகுகாலம் : 
  மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை 
  எமகண்டம் 
  காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை 
  சந்திராஷ்டமம் :  அஸ்வினி 
  பரிகாரம் : பால் 
  இன்று     :அதிகாலை குருப் பெயர்ச்சி 
  கந்த ஷஷ்டி பெருவிழா இரண்டாம் நாள் 

  மேஷம் 
  இன்று சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.  வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 2
  அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
  அஸ்வினி : சுபச்செலவுகள்
  பரணி : வேலைப்பளு.
  கிருத்திகை : மகிழ்ச்சி

  ரிஷபம் 
  இன்று  சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.  தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  அதிர்ஷ்ட எண் : 9
  அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

  கிருத்திகை : மகிழ்ச்சி
  ரோகிணி : பேச்சில் கவனம் .
  மிருகசீரிஷம் :அனுகூலம்

  மிதுனம் 
  இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

  மிருகசீரிஷம் : பிரச்சனைகள்
  திருவாதிரை : முன்னேற்றம்
  புனர்பூசம் : அமைதி

  கடகம் 
  இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 3
  அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  புனர்பூசம் : அலைச்சல்
  பூசம் : பணவரவு.
  ஆயில்யம் : லாபம்.

  சிம்மம் 
  இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 4
  அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
  மகம் : திறமை
  பூரம் : சந்தோஷம்
  உத்திரம் :பாராட்டு. 

  கன்னி
   இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 6
  அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
  உத்திரம் : விரயம்
  அஸ்தம் : அனுசரிப்பு
  சித்திரை : உதவி

  துலாம்
   இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு
  அதிர்ஷ்ட எண் : 7
  அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை 

  சித்திரை : ஆரோக்கியம்
  சுவாதி : ஒற்றுமை
  விசாகம் : முயற்சி

  விருச்சிகம்
   இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 9
  அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
  விசாகம் : செலவு
  அனுஷம் : நன்மதிப்பு
  கேட்டை : தாமதம்

  தனுசு
   இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
  அதிர்ஷ்ட திசை : மேற்கு
  அதிர்ஷ்ட எண் : 2
  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  மூலம் : பணவரவு.
  பூராடம் : மகிழ்ச்சி. 
  உத்திராடம் : சேமிப்பு

  மகரம்
   இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
  அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  அதிர்ஷ்ட எண் : 5
  அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
  உத்திராடம் : ஒற்றுமை. 
  திருவோணம் : அனுகூலம்.
  அவிட்டம் : லாபம்.

  கும்பம் 
  இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்
  அதிர்ஷ்ட திசை : வடக்கு
  அதிர்ஷ்ட எண் : 1
  அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 
  அவிட்டம் : லாபம்
  சதயம் : செலவு.
  பூரட்டாதி : ஆதரவு

  மீனம்
  இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
  அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  அதிர்ஷ்ட எண் : 4 
  அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
  பூரட்டாதி : தாமதம்
  உத்திரட்டாதி : செலவு
  ரேவதி : கவனம்