எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்!

  0
  1
  ராசி பலன்

  பணவரவுகளின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் நம்பிக்கையை அளிக்கும். 

  இன்றைய ராசி பலன்கள் 07.04.2020 ( செவ்வாய் கிழமை)

  காலை 8 மணி முதல் 9 வரை
  மாலை 5 மணி முதல் 5.30 வரை
  ராகுகாலம்
  பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
  எமகண்டம்
  காலை 9 மணி முதல் 10.30 வரை

  மேஷம் ராசி

  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செலவுகள் ஏற்படும். அறகாரியங்களை செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணவரவுகளின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் நம்பிக்கையை அளிக்கும். 
  அதிர்ஷ்ட எண் : 4

  ரிஷபம் ராசி
  பணவரவு சுமாராக இருக்கும்.  வாகன பயணங்களில் கவனத்துடன் செல்வது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நினைத்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.
  அதிர்ஷ்ட எண் : 5

  மிதுனம் ராசி
  திருமணம் தொடர்பான சுப காரியங்கள் ஈடேறும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.
  அதிர்ஷ்ட எண் : 2

  கடகம் ராசி
  குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
   அதிர்ஷ்ட எண் : 5

  சிம்மம் ராசி
  மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மனதில் தோன்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
  அதிர்ஷ்ட எண் : 6

  கன்னி ராசி
  உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த கடன்கள் வசூலாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
  அதிர்ஷ்ட எண் : 3

  துலாம் ராசி
  குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். 
  அதிர்ஷ்ட எண் : 7 

  விருச்சகம் ராசி
  விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் தற்போது நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும்.
  அதிர்ஷ்ட எண் : 8

  தனுசு ராசி
  மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். 
   அதிர்ஷ்ட எண் : 7

  மகரம் ராசி
  உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.
  அதிர்ஷ்ட எண் : 3

  கும்பம் ராசி
  பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.
  அதிர்ஷ்ட எண் : 9

  மீனம் ராசி
  சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
  அதிர்ஷ்ட எண் : 6