எந்த நாளிலும் தீர்ப்பு வெளியாகலாம்……. பாதுகாப்பு கருதி அயோத்தியை காலி செய்யும் மக்கள்…..

  0
  1
  படைகள் குவிப்பு

  அயோத்தி வழக்கில் எந்த நாளிலும் தீர்ப்பு சொல்லப்படலாம் என்பதால், அயோத்தி பகுதியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பல ஆண்டுகளாக இழுத்து வந்த அயோத்தி நில உரிமை வழக்கில் வழக்கு விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. வரும் 16ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் எந்த நாளிலும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் எந்தவித பிரச்னையில் ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கனவே எடுக்க தொடங்கி விட்டன.

  அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதி

  இதற்கிடையே, அயோத்தி நகரில் வசிக்கும் மக்களும் என்னென்ன தயார் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் பெண்கள் மற்றும் குழந்கைளின் பாதுகாப்பை கருதி அவர்களை பாதுகாப்பான இடங்கள் அல்லது வேறு மாவட்டத்தில் தங்க வைத்து வருகின்றனர். பல குடும்பத்தினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பல நாட்களுக்கு தேவையான அளவுக்கு இருப்பு  வைத்து வருகின்றனர்.

  உச்ச நீதிமன்றம்

  அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அனூஜ் அயோத்தி பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக கூறுகையில், இந்த பகுதி மக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பது தொடர்பாக கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் இந்து மஹந்த் மற்றும் முஸ்லிம் இமாம்களுடன் பல்வேறு சந்திப்பு நடைபெற்றது. சிறுபான்மையினர் ஆதிக்கம் மற்றும் இரு தரப்பினரும் உள்ள பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மற்றும் தீர்ப்புக்கு முன்னதாக படைகளை குவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளோம். அதனால் அங்கு மக்கள் பயப்படதேவையில்லை. அயோத்தி முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பு அளிப்பதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.