எந்தப்பக்கம் போனாலும் பலமா அடி விழும்…’ பள்ளம் பறிக்கும் அமித் ஷா… பதறித்துடிக்கும் எடப்பாடி..! 

  0
  2
  அமித்ஷா,எடப்பாடி

  தமிழக மக்களிடம் நமது கட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் அடிமை அரசு என்ற பெயரை துடைக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் கூட்டணி மட்டுமல்ல, நமது கட்சியின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. 

  தமிழக மக்களிடம் நமது கட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் அடிமை அரசு என்ற பெயரை துடைக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் கூட்டணி மட்டுமல்ல, நமது கட்சியின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. 

  edappadi

  இந்த இடைத்தேர்தலில் 2 தொகுதியில் வெற்றி பெற்றால்  நமது கட்சியையும், சின்னத்தையும் நம்பி உள்ள தொண்டர்களும் நம்முடன் இருப்பார்கள். அதையும் விட்டுக் கொடுத்தால் நம்மை நம் கட்சிக்காரர்களே மதிக்க மாட்டார்கள். இத்தனை நாள் உங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம். நீங்கள் சொன்னபடியே செய்தோம். இந்த ஒருமுறையாவது எங்கள் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

  இதனால், அதிர்ந்துபோன முக்கிய நிர்வாகிகள் உங்கள் கோரிக்கை நியாயமானது தான். இருந்தாலும் உங்களை போல எங்களுக்கு அமைச்சர்களும் முக்கியம். சீனியர்களும் முக்கியம். அவர்களின் பிரச்னைகள் பெரிய அளவில் உள்ளன. வருமான வரித்துறையை ஏவி விட்டு பாஜக ரணகளப்படுத்தி விடும்.  கட்சியே நம் கையை விட்டு போய்விடும் நிலை ஏற்பட்டு விடும். ஆகவே பாஜக விஷயத்தில் எங்களால் தனித்து முடிவெடுக்க இயலாது.  நம்மை பாஜக ஒதுக்கினால் ஒழிய, நாம் பாஜகவை ஒதுக்கி வைக்க முடியாது. 

  எங்களுக்காக கொஞ்சம் அமைதியாக இருங்கள். இந்த விஷயத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என கூல்படுத்தி வருகிறது அதிமுக தலைமை.  எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியை அம்மா விட்டுச்சென்ற ஆட்சியை அடியோடு ஒழிக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் போல என தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள். 

  modi and stalin

  ஒருவேளை பாஜக திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக நிலைமை அதோகதி தான். ஆகையால் இன்னும் 19 மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.  அப்படிப்பட்ட சூழலில் அதிமுக – பாஜக கூட்டணி போட்டியிட்டால் அடுத்த ஆட்சியில் அதிமுக நீடிக்காது. ஒருவேளை திமுக – பாஜக இணைந்தால் எதிரியும் எதிரியும் பங்காளியான விரக்தியில் அதிமுக ஆட்சி அமைக்காவிட்டாலும் சில தொகுதிகளில் வெல்ல முடியும். ஆக மொத்தத்தில் இன்னும் 19 மாதம் தான் இருக்கிறது. எங்களை தங்களது அடிமையாக வைத்திருக்க வேண்டாம் என பாஜகவிடம் சொல்லமுடியாமல் தவித்து வருகிறது அதிமுக தலைமை. அதையும் மீறி எதிர்த்து பேசினால் தலை போய்விடும் எனப்பம்முகிறது அதிமுக.