எத்தனை வர்ணம் பூசினாலும், பா.ஜ.க வர்ண சாயம் வெளுத்துவிடும் : மு.க ஸ்டாலின் ட்வீட்..!

  8
  MK Stalin

  தாய்லாந்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

  தாய்லாந்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய மோடி,  
  “தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தற் பொருட்டு” இந்த குறளை மேற்கோள் காட்டி பேசினார். அவரின் பேச்சு தாயலாந்துவாழ் தமிழ் மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, பா.ஜ.க கட்சியினர் தனது ட்விட்டர் பக்கத்தில் வள்ளுவரின் உடை காவி தான் அதனை வெள்ளையாக மாற்றியது கலைஞர் ஆட்சி தான் என்று பதிவிட்டிருந்தனர். 

   

  சில நாட்களுக்கு முன்னர், அசுரன் படம் பார்க்கச் சென்ற ஸ்டாலின் கட்சி தொண்டர்களுடன் அமராமல் தனியாக அமர்ந்திருந்தார். இது குறித்து, 
  ‘பிறப்பால் மட்டுமின்றி மனதாலும் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒன்றே என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் செயல் புரிபவரே சிறந்த மனிதன்.அத்தகைய செயல் புரியாதோர் எந்த சிறப்பியல்பும் அற்ற மேன்மை இல்லாதவர் ஆவர்.’ என்று திருக்குறளின் பொருள் மூலமாக மு.க ஸ்டாலினை விமர்சித்துப் பதிவு செய்திருந்தனர். 

   

   

  பா.ஜ.க கட்சியினர் ட்விட்டரில் செய்த பதிவிற்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்குக் கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!
  எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.
  சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்துத் திருந்தப் பாருங்கள்! என்று பதிலளித்துள்ளார். பா.ஜ.க கட்சியினரின் இந்த அனைத்து வாதங்களும் மோடி திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டதற்குப் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.