எதிர்க்கட்சி தலைவர்களுடன் வரும் 8 ஆம் தேதி பிரதமர் ஆலோசனை!

  0
  1
  நரேந்திர மோடி

  இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதில் 86 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

  இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதில் 86 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் மிகவும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகின்றனர்.

  mOdi

  இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 எதிர்க்கட்சி தலைவர்ளுடன் வரும் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். முன்னதாக கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.